சூரியன் நகர் பகுதியில் நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணி

திருப்பூர், மே 6: திருப்பூர் சூரியன் நகர் பகுதியில் உள்ள நொய்யலாற்றில் பொக்லைன் வாகனம் மூலம் தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றறது. சூரியன் நகர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள், ஆகாயத்தாமரைகள் மற்றும் தேவையற்ற செடி, கொடிகள் அதிகளவில் மண்டிப் போயிருந்தன. நீர் செல்வதற்கு போதிய இட வசதி இல்லாமல் இருந்து வந்தது. குறிப்பாக, வரும் பருவமழை காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, இத்தகைய கழிவுகளால் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் சீராகச் செல்ல முடியாமல் கரைகளைத் தாண்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் இருந்தது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூர்வார மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சூரியன் நகர் பகுதியில் உள்ள நொய்யலாற்றில் பொக்லைன் வாகன உதவியுடன் நேற்று தூர்வாரும் பணி நடைபெற்றது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பணியால் நீர் செல்லும் பாதை அகலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Related Stories: