உடுமலை, மே 5: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வழக்கமாக தேர்தல் முடிவு வெளியாகும்போது உடுமலை நகரம் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக தொண்டர்களால் பரபரப்பாக காணப்படும். சாலைகளில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம் களைகட்டும். ஆனால் நேற்று எந்த கொண்டாட்டங்களும் இன்றி உடுமலை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
உடுமலை பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் யாரையும் காண முடியவில்லை. உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் பிரதான கட்சிகள் வென்றாலும், மாநில அளவில் தவெக முன்னிலையில் இருந்ததால், திமுக, அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோர்வு காணப்பட்டது.
