அவிநாசி, ஏப்.22: அவிநாசி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி நேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவிநாசி நகராட்சி வஉசி மைதானத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா காலத்திற்கு பிறகு, தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றியவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். படித்த இளைஞர்களுக்காக திருமுருகன்பூண்டியில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இருந்த எம்எல்ஏக்கள் நினைத்திருந்தால், அவிநாசி தொகுதியில் எவ்வளவோ தொழில்களை அமைத்திருக்க முடியும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
