சீனாவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 26 பேர் பலி: 61 தொழிலாளர்கள் படுகாயம்

பெய்ஜிங்: சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 61 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் சாங்ஷாவில் இருக்கும் லியுயாங்கில் ஹூவாஷெங் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் பிற்பகல் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்புதுறையினர் மற்றும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.

ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்ட சுமார் 480க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மூன்று மீட்பு ரோபோக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த நிலையில் 61 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்து ஏற்பட்ட இடத்துக்கு அருகே இரண்டு வெடிமருந்து கிடங்குகள் அமைந்துள்ளது. எனவே மீட்பு குழுவினர் அருகில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றி இரண்டாவது கட்ட விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வளையத்தை அமைத்துள்ளனர். இதனிடையே அவசர மேலாண்மை அமைச்சகம் மீட்பு பணிகளுக்கு வழிகாட்டுவதற்காக நிபுணர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்துள்ளது. வெடிவிபத்தை தொடர்ந்து பட்டாசு ஆலையின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: