டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 17.3 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 87 ரன்களும், கார்த்திக் சர்மா 41 ரன்களும் எடுத்தனர்.
