தவெகவுடன் அதிமுக கூட்டணி?.. மாஜி அமைச்சர் பேட்டி

 

ஈரோடு: தவெக.வுடன் கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் முடிவெடுப்பார் என மாஜி அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் 4வது முறையாக வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கே.சி.கருப்பணனுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ் வழங்கினார். பின்னர், கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது: பவானியில் 5 முறை போட்டியிட்டு, ஒரு முறை தோல்வி அடைந்துள்ளேன். 4 முறை வெற்றி பெற்றுள்ளேன். மக்களின் எழுச்சி மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பால் விஜய்க்கு வாக்களித்துள்ளனர்.

விஜய் எப்படி ஆட்சி செய்வார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என்றார். விஜயுடன் அதிமுக கூட்டணி வைக்குமா? என்ற கேள்விக்கு கேட்டதற்கு, இது போன்ற பெரிய கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. எங்களது பொதுச்செயலாளர் தான் முடிவெடுப்பார். விஜய் நல்லாட்சி தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கருப்பணன் கூறினார்.

Related Stories: