சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறி இருக்கிறார். லட்சியமும், கொள்கையும் முக்கியம் என்று என்று சூளுரைத்து மீண்டும் எழுபவர் தான் மு.க.ஸ்டாலின் என்று குறிப்பிட்டு உள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக கூட்டணிக்காக பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் கி.வீரமணி ஈடுபட்டார். இந்த சூழலில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி
நடைபெற்று முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், மாற்றம் என்ற பெயரில் நடந்திருந்தாலும் திரைக்கவர்ச்சி மற்றும் இளைஞர்களின் மோகத்தின் அறுவடை தான் இந்த தேர்தல் முடிவு என்று கி.வீரமணி குறிப்பிட்டு உள்ளார். எனினும் அதிக இடங்களை பிடித்து ஆட்சியமைக்க உள்ள ஜோசப் விஜய்க்கு நமது வாழ்த்துக்கள் என்று கூறினார்.
