சாத்தூரில் நயினார் சறுக்கியது எப்படி?

சாத்தூர்: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் சாத்தூர் தொகுதிக்கு துண்டு போட்டு காத்திருந்த ராஜவர்மன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியடைந்தனர். பாஜவிற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கிக் கொண்டனர். நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தபோது மட்டும் தலைகாட்டினர். அதன்பிறகு அதிமுகவினர் ஆதரவின்றி நயினார் நாகேந்திரன் தன்னந்தனியாக தனது சொந்த ஊர் ஆதரவாளர்களை அழைத்து வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதுபோக நயினார் நாகேந்திரனின் முக்குலத்தோர் சமூக வாக்குகளை சிதறடிக்கும் வகையில் சசிகலாவின் கட்சி சார்பில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி தலைவர் இசக்கிராஜா களமிறக்கப்பட்டார். இசக்கிராஜா 11,602 வாக்குகள் பெற்று 4ம் இடம் பிடித்தார். தேர்தலில் இசக்கிராஜா பெற்ற முக்குலத்தோர் சமூக வாக்குகள் நயினார் நாகேந்திரனின் தோல்விக்கு காரணமாக அமைந்தது உறுதியாகியுள்ளது.

Related Stories: