மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

கெங்கவல்லி, பிப்.26: கும்பகோணத்தில் இருந்து மினி லாரியில் வைக்கோல் போர் ஏற்றிக்கொண்டு அரியலூரை சேர்ந்த சிவா என்பவர், நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி நோக்கி ஓட்டிக்கொண்டு வந்தார். அவருடன் சத்திய சீலன் (21) என்பவர் வந்தார். கெங்கவல்லி அடுத்த வீரகனூர் புளியங்குறிச்சி அருகே வந்த போது மினி லாரியை நிறுத்தினார். பின்னர் வைக்கோல் போரை எடுக்க சத்தியசீலன் லாரி மீது ஏறிய போது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் கை உரசியது. அப்போது மின்சாரம் தாக்கி, சத்தியசீலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வீரகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>