செல்போன் திருடிய 2 பேர் கைது

திருப்பூர், பிப்.26: திருப்பூர் பொல்லிகாளிபாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர்  கல்லூரி மாணவர் விஜிபிரியதர்ஷன் (21). இவர் தென்னம்பாளையத்தில் உள்ள தக்காளி விற்பனை கடையில் காலை நேரத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கடையில் தனது செல்போனை சார்ஜரில் போட்டு விட்டு விஜிபிரியதர்ஷன் வேலை செய்துள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் எடுக்க சென்றபோது செல்போனை காணவில்லை.

உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடியபோது கடைக்கு வந்த 2 பேர், செல்போனை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த 2 பேரையும் பிடித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீதரன் (22), திருமுருகன்பூண்டியை சேர்ந்த ரோஹித் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

Related Stories:

>