திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல்

திருப்பூர், பிப்.26: திருப்பூர் மாநகராட்சியின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியது. பல லட்சம் மக்கள் தொகையும், ஏறத்தாழ 2.5 லட்சம் கட்டிடங்களும், பல்லாயிரம் தொழிற்சாலைகள், கடைகள், அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இதன் வரவு-செலவு நிதி நிலை (பட்ஜெட்) அறிக்கை, நிதியாண்டு இறுதி வாக்கில் தாக்கல் செய்யப்படுகிறது.

 அடுத்த நிதியாண்டுக்கான உத்தேச வரவு மற்றும் செலவினங்கள், மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை இதில் இடம்பெறும்.

தற்போது 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான பணியில் மாநகராட்சி கணக்கு பிரிவு, பொறியியல் பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (26ம் தேதி) மாலை 5 மணிக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் செயற்பொறியாளர் மற்றும் உதவி கமிஷனர்கள் கலந்துகொள்கின்றனர்.

Related Stories:

>