முதுமலையில் 5 மாநில புலிகள் காப்பக இயக்குனர்கள் ஆய்வு

ஊட்டி, பிப்.26: 5 மாநில புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள் மற்றும் முதன்மை வன பாதுகாவலர்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள புலிகள் காப்பகம் கள இயக்குனர்கள் மற்றும் முதன்மை வனப்பாதுகாவலர் கள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் புலிகள் காப்பகத்தின் மேலாண்மை மதிப்பீடு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அந்த புலிகள் காப்பகத்தின் மதிப்பீடுகள் தயாரிப்பது, அகில இந்திய புலிகள் காப்பகங்களில் உள்ள புலிகளின் மதிப்பீடுகள் குறித்து தகவல் சேகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இருநாள் நடந்த பயிற்சி அரங்கில் நேற்று அனைத்து கலை இயக்குனர்கள் மற்றும் முதன்மை வன பாதுகாவலர்கள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சென்றனர். அங்கு புலிகள் காப்பகம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும், எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இதில்,  கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

Related Stories:

>