பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆனது; பிரதமர் மோடி இரங்கல்

 

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சிவாஜி நகரில் உள்ள அரசு பவுரிங் மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட நடைபாதை வியாபாரிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி, எக்ஸ் தள பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், இந்த சம்பவம் மிகவும் துயரமானது.

துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு சம்பவம்: மத்திய பிரதேர மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில் 35 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று நேற்றிரவு அதிவேகமாக சென்றது.

அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணித்தவர்களில் 12 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள், அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துக் கொண்டார் மேலும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

 

Related Stories: