மேற்கு வங்க தேர்தலில் மத்திய படையினர் அத்துமீறல்; மம்தா பானர்ஜி சரமாரி குற்றச்சாட்டு

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்​தலின் போது பெண்​கள், குழந்​தைகள் என்​றும் பாராமல் மக்​கள் மீது மத்​தி​ய படை​யினர் தாக்​குதல் நடத்தி அத்​து​மீறினர். இதனால், மாநிலத்​தில் எந்த வாக்​குச்​சாவடி​யும் பாது​காப்​பாக இல்லை என்று அம்​மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். மேற்கு வங்க சட்​டமன்ற தேர்​தலின் இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​திவு கொல்​கத்தா உள்​ளிட்ட 142 தொகு​தி​களில் நேற்று நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி, தனது சொந்​த தொகு​தி​யான பவானிபூரில் வாக்​களித்த பிறகு, ஊடகத்​திற்கு பிரத்​யேக பேட்​டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தேர்​தல் பார்​வை​யாளர்​கள் வெளி​யிடங்​களில் இருந்து வந்​துள்​ளனர். அவர்​கள், பாஜ​வினர் உத்​தர​வுப்​படி செயல்​படு​கின்​றனர். அனைத்து கட்சி கொடிகளும் அகற்​றப்​பட்​டுள்​ளன. 70-வது வார்டு கவுன்​சிலரை வெளி​யேவர அனு​ம​திக்​க​வில்​லை. பாஜ​வினர் வன்​முறை​யில் ஈடு​படுகின்​றனர். நானும், பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்​ஜி​யும் இரவு முழு​வதும் விழித்​திருந்​தோம். பல்​வேறு இடங்​களி​லிருந்து தடியடி சம்​பவங்​கள் குறித்து புகார்​கள் வந்​துள்​ளன.

நீதி​மன்ற உத்​தர​வு​களை மீறி திரிண​மூல் காங்கிரஸ் தொண்​டர்​கள் பலரை மத்​தி​ய படை​யினர் தடுத்து வைத்துள்​ளனர். எந்​த ஒரு வாக்​குச்​சாவடி​யிலும் மாநில காவல்​துறை பணி​யில் அமர்த்​தப்​பட​வில்​லை. அனைத்து வாக்​குச்​சாவடிகளை​யும் மத்​தி​ய படையினரே தங்​களது கட்​டுப்​பாட்​டுக்​குள் வைத்​துள்​ளனர். மக்​களை துன்​புறுத்​து​வது​தான் இவர்​களது வேலை​யா?’ என்றார். இதற்​கிடை​யில், முதல்​வர் மம்​தா​வின் மரு​மகன் அபிஷேக் பானர்​ஜி​யின் தொகு​தி​யான டைமண்ட் ஹார்​பரில் உள்ள சில வாக்​குச்​சாவடிகளில் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மாற்​றப்​பட்​டுள்​ள​தாக பாஜ புகார் தெரிவித்தது. இதனால் அங்கு சிறிது நேரம் வாக்​குப்​ப​திவு நிறுத்​தப்​பட்​டது. ஆனால், தோல்வி பயத்​தால் பாஜ வீண் வதந்​தி​களை பரப்​புவ​தாக திரிண​மூல் காங்​கிரஸ்​ தரப்​பு மறுப்​பு தெரிவித்​துள்​ளது.

ஏற்கனவே ஹார்பர் பகுதியில் வன்முறையை தடுக்க சிறப்பு காவல் பார்வையாளர் அஜய் பால் அதிரடி நடவடிக்ைக எடுத்தார். குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதால் ‘சிங்கம்’ என அழைக்கப்படும் உத்தரப்பிரதேச கேடர் அதிகாரியான அஜய் பால் சர்மா, தேர்தல் விதிகளை மீறி செயல்படுவதாக திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) குற்றம் சாட்டியுள்ளது. ஃபால்டா தொகுதி டி.எம்.சி.வேட்பாளர் ஜஹாங்கிர் கானின் வீட்டுக்கு நேரடியாக சென்று, ‘‘வாக்காளர்களை அச்சுறுத்த முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.எம்.சி. சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் படைகள் பாதுகாப்பு: தேர்​தல் ஆணைய மூத்த அதி​காரி கூறுகையில், ‘வாக்​குப்​ப​திவு முடிந்த பிறகும் 700 கம்​பெனி மத்​தி​ய படை​யினர் மேற்கு வங்​கத்​திலேயே தங்​கி​யிருப்​பர். அவர்​கள் சட்​டம் – ஒழுங்​கை பராமரிக்​க​வும், அசம்​பா​விதங்​களை தவிர்க்​கும் பணி​யிலும் ஈடு​படு​வர். மறு உத்​தரவு வரும் வரை அவர்கள் தொடர்ந்து இந்​தப் பணி​களி்ல் ஈடு​படு​வார்​கள். குறிப்​பாக, பதற்​றம் நிறைந்த பகு​தி​களில் மாநில நிர்​வாகத்​திற்​கு துணை​யாக இவர்​கள் தேவை​யான பாது​காப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்​வர். கள நில​வரம் மற்​றும் பாது​காப்பு முகமை​களின் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் படைகளின் எண்​ணிக்​கையை அதி​கரிப்​பது குறித்து முடி​வெடுக்​கப்​படும்’ என்றார்.

 

Related Stories: