புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்குடன் தொடர்புடைய அமலாக்கத்துறையின் பணமோசடி வழக்கில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா ஒரு சார்புடையவர் எனக் கூறி, அவர் முன்னிலையில் ஆஜராகப்போவதில்லை என்று கெஜ்ரிவால் ஏற்கனவே கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவாலுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறையின் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு புதிய நோட்டீஸ்
- கெஜ்ரிவால்
- அமலாக்க இயக்குநரகம்
- புது தில்லி
- முதல் அமைச்சர்
- தில்லி
- தில்லி உயர் நீதிமன்றம்
- ஸ்வர்ண காந்தா ஷர்மா
