முத்துப்பேட்டை இடும்பாவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. நிதியளிப்பு நிகழ்ச்சி

முத்துப்பேட்டை, பிப்.25: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்தில் கம்யூனிஸ்ட் தியாகியின் 19ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி அனுசரிப்பு நிகழ்ச்சியில் கட்சிக்கு நிதியளிக்கப்பட்டது. விதொச ஒன்றிய செயலாளர் வீரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தியிடம் முதல்கட்டமாக கட்சி நிதியாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் வீரமணி, கிளை செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>