காஞ்சிபுரம், ஏப்.29: காஞ்சிபுரம் மாவட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் தபால் வாக்கு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி தொடர்பாக, வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு முதல் சீரற்றமயமாக்கல் தேர்தல் அலுவலர் சினேகா தலைமையில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தி.சினேகா தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் மூலம் பதிவான வாக்குகள் ஆகியவற்றை எண்ணுவதற்காக வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் நுண்ணறிவு பார்வையாளர்கள் ஆகியோருக்கான முதல் சீரற்றமயமாக்கல் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026க்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. மேற்படி, பதிவான வாக்குகள் காஞ்சிபுரம் மாவட்டம், காரைபேட்டை கிராமத்தில் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பொறியியல் கல்லூரியில், வரும் 04.05.2026 அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. மேற்படி, வாக்கு எண்ணும் பணிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலந்தூர், பெரும்புதூர் (தனி), உத்திமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் மூலம் பதிவான வாக்குகள் ஆகியவற்றை எண்ணுவதற்கான வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் நுண்ணறிவு பார்வையாளர்கள் ஆகியோருக்கான முதல் சீரற்றமயமாக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தி.சினேகா தலைமையில் நடைபெற்றது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வாக்கு எண்ணும் அலுவலர்கள் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு: மேற்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு (29.04.2026) இன்று காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ்.கே.வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், காஞ்சிபுரம் சப்- கலெக்டருமான ஆஷிக் அலி, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான விஜயகுமார், பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியருமான பாலாஜி, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி மண்டல அலுவலருமான எஸ்.முருகதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
