திருப்போரூர் தொகுதியில் தயார் நிலையில் 369 வாக்குச்சாவடிகள்

திருப்போரூர், ஏப்.23: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 369 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் வாக்குப்பதிவு மேற்கொள்ள 442 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 442 கட்டுப்பாட்டு கருவிகளும், 479 சரிபார்க்கும் வி.வி.பேட் கருவிகளும் வழங்கப்பட்டிருந்தன. இயந்திர கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக வழங்குவதற்காக நிலுவையில் வைத்துக்கொண்டது போக 369 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்கு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் விஜயகுமாரி, உதவி தேர்தல் அலுவலர் ஆறுமுகம் மற்றும் அனைத்துக் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த
அறையின் சீல் திறக்கப்பட்டது. பின்னர் 31 மண்டலங்களில் அடங்கிய 369 வாக்குச் சாவடிகளுக்கும் மண்டல வாரியாக அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மூடப்பட்ட லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

Related Stories: