சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கிராம செவிலியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஊட்டி, பிப்.25: சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஊட்டியில் கிராம செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஏடிசி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தம்மாள், லோகேஸ்வரி மற்றும் ராபர்ட் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய குழு முரண்பாட்டை கலைந்திட வேண்டும். முடக்கப்பட்ட டி.ஏ. சரண்டரை வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியத்தின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டியில் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் கிராம செவிலியர்கள் சங்கம் சார்பில் நடந்தது.இதில், சுகாதார செவிலியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஷீலா, மாவட்ட செயலாளர் சக்குபாய் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிராம செவிலியர்கள் நேற்று பணிக்குச் செல்லாத நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டது.

Related Stories:

>