புதுப்பள்ளி, சங்கனாச்சேரி 2 தொகுதிகளின் இவிஎம் எந்திரங்கள் ஒரே அறையில் வைத்திருப்பது ஏன்..? காங்கிரஸ் கேள்வி

கோட்டயம்: கேரள காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் இந்த தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் முகவர் மூலம் தேர்தல் ஆணையத்திடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது.

இதுபற்றி சாண்டி உம்மன் கூறியதாவது:நான் போட்டியிட்ட புதுப்பள்ளி தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சங்கனாச்சேரி தொகுதியின் இயந்திரங்களுடன் சேர்த்தே ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளன. கேரளா முழுவதும் நிலவும் கடும் கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், அறையில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டிருந்தாலும் கூட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரே அறையில் வைக்கப்பட்டு இருப்பது எனக்கு சரியாகப்படவில்லை.

வாக்கு எண்ணிக்கை ஒரே அறையில்தான் நடைபெற உள்ளது. ஆனால், இரண்டு தொகுதிகளுக்கும் உரிய இயந்திரங்களை ஒரே அறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. அங்கு மற்றொரு அறையும் உள்ளது; ஒரு தொகுதிக்குரிய இயந்திரங்களை அந்த அறையில் வைத்திருக்கலாம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் மே 4ஆம் தேதிக்குப் பிறகு இது குறித்து நான் கருத்து தெரிவிப்பேன்.
இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: