தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி: அனைத்து கருத்து கணிப்புகளும் கூறுவது என்ன..?

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் கூறப்பட்டுள்ளது. திமுக 43.1%; அதிமுக 34.8%; தவெக 15.1% வாக்குகளை பெறும் என அக்னி நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்த உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 169 இடங்களையும், அதிமுக கூட்டணி 64 இடங்களையும், தவெக ஒரு தொகுதியையும் கைபற்றும் என அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து மின்னம்பலம் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 155, அதிமுக கூட்டணி 72, த.வெ.க. 5, மற்றவை – 2 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் திமுக கூட்டணி 28, அதிமுக கூட்டணி 19, தவெக 3 தொகுதிகளை கைப்பற்றும். வடக்கு மண்டலத்தில் திமுக கூட்டணி 30, அதிமுக கூட்டணி 21, தவெக 0, மற்றவை 1 தொகுதிகளை கைப்பற்றும். தென்மண்டலத்தில் திமுக கூட்டணி 39, அதிமுக கூட்டணி 18, தவெக 0, மற்றவை 1 தொகுதிகளை கைப்பற்றும். சென்னை மண்டலத்தில் திமுக கூட்டணி 31, அதிமுக கூட்டணி 4, தவெக 2, மற்றவை தொகுதிகளை கைப்பற்றும். மத்திய மண்டலத்தில் திமுக கூட்டணி 27, அதிமுக கூட்டணி 10, தவெக 0, மற்றவை தொகுதிகளை கைப்பற்றும் என மின்னம்பலம் கணித்துள்ளது.

திமுக கூட்டணி 125-145, அதிமுக கூட்டணி 60- 80, த.வெ.க. 18-24, மற்றவை 2-6 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக Republic P marq கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 145-155, அதிமுக கூட்டணி 45-65, த.வெ.க. 7-9 இடங்கள் வரை கிடைக்கும் என SATTA BAZZAR’S கணித்துள்ளது. திமுக கூட்டணிக்கு 36%, அதிமுக கூட்டணிக்கு 31%, த.வெ.க.வுக்கு 23%, பிற கட்சிகளுக்கு 10% வாக்கு கிடைக்கலாம் என அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி 120-140, அதிமுக கூட்டணி 60-70, தவெக 30-40, மற்றவை 0-4 என People’s Insight கணிப்பில் கூறப்படுகிறது. திமுக கூட்டணி 122-132, அதிமுக கூட்டணி 87 -100, தவெக 12-16, நாதக 1-6 என Matrize கருத்துக் கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: