கிழக்கு பசிபிக் கடல் வழியே போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க ராணுவம் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2ம் முறையாக பதவியேற்ற டிரம்ப், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.26) பசிபிக் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றின் மீது அமெரிக்க ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படகில் இருந்த 3 பேர் பலியாகினர். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் எடுத்து வரும் நடவடிக்கைகளில், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் கரிபீயன் கடல் வழியே சென்ற படகுகள் மீது போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடுகளில் 186 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: