ஸ்ரீமுஷ்ணம் அருகே கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை: வரதட்சணை கொடுமை என பெண்ணின் பெற்றோர் புகார்

ஸ்ரீமுஷ்ணம்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நிமிலேஸ் மகன் அற்புதராஜ்(34). துபாயில் வேலை செய்து வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன் இவர் பாளையங்கோட்டையை சேர்ந்த மரியசெல்வி மகள் ஜெபமாலை மேரியை(29) திருமணம் செய்துள்ளார். 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. துபாயிலிருந்து ஒரு வாரத்துக்கு முன் அற்புதராஜ் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அற்புதராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. பின்னர் அற்புதராஜ் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியில் சென்றனர். இந்நிலையில் ஜெபமாலை மேரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்ற அற்புதராஜ் திரும்பி வந்தபோது, மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து மனமுடைந்து அவரும் மற்றொரு அறையில் லுங்கி மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஜெபமாலை மேரியின் தாய் மரியசெல்வி, மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் வரதட்சணையாக பணம், நகை கேட்டு தொந்தரவு செய்ததால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில், சோழத்தரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: