நெல்லை: கோடை வெயில் காரணமாக நெல்லை மாவட்டம் காரையார், சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இரு அணைகளில் இருந்தும் 52 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், கடந்த காலங்களில் அதிகளவில் மின் உற்பத்தி செய்ததால் பாதிப்பு இல்லை என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
