ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைத்ததில் அரசியல் இல்லை

 

சென்னை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதில் அரசியல் இல்லை என திருவான்மியூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. உணவகம் அருகில் உள்ள வீட்டின் வாசலில் ஜேம்ஸ் வசந்தன் காரை நிறுத்தியுள்ளார். வீட்டின் உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பெண் ஒருவர் வீட்டுக்குள் செல்ல முடியாததால் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார்.

Related Stories: