கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

குன்றத்தூர்: குன்றத்தூர் ஒன்றிய கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கம் சார்பில், சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று குன்றத்தூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

4ம் நிலை ‘டி’ கிரேடு உடனே வழங்கவேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்..

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் வட்ட கிளை தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>