மதுரை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: திமுக அரசின் 5 ஆண்டு ஆட்சியில் மகளிருக்கான திட்டங்கள், இளைஞர்களுக்கான திட்டங்கள், விவசாயிகளுக்கான திட்டங்கள், தொழிலாளர்களுக்கான திட்டங்கள் மட்டுமின்றி ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. நிறைய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் அபரிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விஜய் தற்போது தான் அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார். திமுகவுக்கும், காங்கிரசுக்கும் கட்டமைப்பு உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் தோல்வியே கிடைக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டிப்பாக மீண்டும் திமுக ஆட்சி அமையும். இவ்வாறு கூறினார்.
