ஆர்எஸ்எஸ் என்பது ராஷ்டிரிய சரணாகதி சங்கம்: ராகுல்காந்தி விமர்சனம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பானது ராஷ்டிரிய சரணாகதி சங்கம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் ராம் மாதவ் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ் பேசுகையில், இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு ஒப்புகொண்டதாகவும், அமெரிக்கா விதித்த அதிகப்படியான வரிகளை ஏற்பதற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார். எனினும் பின்னர் மாதவ் மன்னிப்பு கோரியிருந்தார். தான் கூறியது உண்மையின் அடிப்படையில் தவறானது என்று தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து ராகுல் தனது பதிவில்,‘‘ஆர்எஸ்எஸ் என்பது ராஷ்டிரிய சரணாகதி சங்கம். நாக்பூரில் போலி தேசியம். அமெரிக்காவில் முழுமையான அடிமைத்தனம். ராம் மாதவ் சங்கத்தின் உண்மையான இயல்பை மட்டுமே வெளிப்படுத்தி உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், ஒரு காலத்தில் அமெரிக்காவின் 7வது கடற்படை வங்காள விரிகுடாவில் நின்றபோது கூட இந்தியா சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் இன்றோ, சமரசத்திற்கு உட்பட்ட ஒரு பிரதமர் இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: