விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி: அகிலேஷ் வாக்குறுதி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார். லக்னோவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், ‘‘2027ம் ஆண்டில் சமாஜ்வாடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் கரும்பு விவசாயிகளுக்கு அவர்களின் விளைப்பொருட்களுக்கான பணம் 24மணி நேரத்திற்குள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு சட்டத்தின் வாயிலாக கடன் தள்ளுபடி பயிர்க்காப்பீடு, இலவச நீர்ப்பாசனம், உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவை வழங்கப்படும். விவசாயிகளுக்கு ரூ.15ஆயிரம்கோடி மதிப்பிலான விவசாயிகள் சூழல் நிதி அமைக்கும் திட்டம் தொடங்கப்படும். தொழிலதிபர்களிடம் இருந்து நிலுவைத் தொகையை அரசே வசூலிக்கும். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.

Related Stories: