முதற்கட்ட தேர்தல் மே.வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல் ஆணையம் தகவல்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் முதற்கட்ட தேர்தல் முடிந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு எதுவும் நடைபெறாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மேற்குவங்கத்தில் கடந்த வியாழக்கிழமை( 23ம் தேதி) 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக மத்திய பாதுகாப்பு படைகள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டதால் 92.6 சதவீத வாக்குகள் பதிவாகின. எனவே, 44,376 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது எந்தவொரு அசம்பாவித சம்பவமோ, இடையூறுகளோ அல்லது முறைகேடுகளோ நடந்ததாக எந்த புகார்களும் வரவில்லை. எனவே, இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை” என்றார்.

Related Stories: