ஆம்பூர் அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெங்கடேசன் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த வாக்குப்பதிவின்போது அவர், கஸ்பா அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். கழுத்தில் அதிமுக துண்டு அணிந்தும், தொண்டர்கள் சிலருடனும் அவர் வாக்குச்சாவடிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடியில் அவர் தனது செல்போனை பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில் புகாரின்பேரில் ஆம்பூர் டவுன் போலீசார், அதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மீது நேற்றுமுன்தினம் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: