வெயிலுக்கு இதமாக பம்ப் செட்டில் ஆட்டம் போடும் சிறுவர்கள்

ஊத்துக்கோட்டை, ஏப்.25: தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீடுகளில் அடங்கியிருக்கும் மாணவ, மாணவிகளான சிறுவர், சிறுமியர்கள் கோடை வெயிலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மோட்டார், பம்ப் செட்டு போன்ற பகுதிகளில் குளித்து வருகிறார்கள். பெரியபாளையம் அருகே, குமரப்பேட்டை ஊராட்சி ராள்ளப்பாடி கிராமத்தில் உள்ள மாணவர்கள் கிணறு மற்றும் மோட்டார் பம்ப் செட்டுகளில் குளித்து ஆட்டம் போட்டு வருகின்றனர். இதனால், அவர்கள் புத்துணர்ச்சியுடன் திகழ்கிறார்கள். இப்போதே இந்த நிலை என்றால், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் கத்தரி வெயிலுக்கு பம்ப் செட்டுகளிலேயே தஞ்சம் அடைந்து விட வாய்ப்பிருக்கிறது. சிறுவர், சிறுமிகளை தொடர்ந்து, பெரியவர்களும் வெயிலுக்கு குளிப்பதற்காக பம்ப் செட்டை நாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: