ஓட்டுமிஷினை அனாதையாக விட்டுவிட்டு சாப்பிட சென்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் கூண்டோடு சஸ்பெண்ட்: மேற்குவங்கத்தில் வன்முறை பூத்தில் மறுவாக்குப்பதிவு?

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நடந்த வன்முறை மற்றும் முறைகேடுகள் காரணமாக பல்வேறு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 152 தொகுதிகளுக்கு நேற்று நடந்த முதற்கட்ட சட்டசபை தேர்தலில், வரலாறு காணாத வகையில் 92.35 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. தட்சிண தினாஜ்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 95.22 சதவீத வாக்குகள் பதிவாகின. சுமார் 3.6 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்த தேர்தலில், பாதுகாப்பிற்காக 2,407 கம்பெனிகள் ஒன்றிய படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நவோடா போன்ற பகுதிகளில் வன்முறை மோதல்கள் வெடித்த போதிலும், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

வன்முறை, முறைகேடு நடந்த இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ‘செயற்கை நுண்ணறிவு கண்கள்’ எனப்படும் தொழில்நுட்ப கண்காணிப்பு கருவி மூலம், வெளிநபர்கள் அத்துமீறியது மற்றும் வாக்குச்சாவடி முடக்கம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முர்ஷிதாபாத், மால்டா மற்றும் கூச் பெஹார் பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மறுவாக்குப்பதிவுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, பிங்லா தொகுதியில் உள்ள 9 எண் வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உட்பட 8 பேரும் உணவு இடைவேளைக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனாதையாக விட்டுச் சென்றதால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

Related Stories: