சிங்கம்புணரியில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 மரண தண்டனை!!

சிவகங்கை: சிங்கம்புணரியில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 5 மரண தண்டனை விதிக்கப்பட்டது. வீடியோ கேம் கற்றுத் தருவதாகக் கூறி 5 சிறுமிகளை பாலியல் வான்கொடுமை செய்த சந்திரனுக்கு 5 மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் நடந்த வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ நீதிமன்றம், கடும் தண்டனை வழங்கி தீர்ப்பிக்கப்பட்டுள்ளது. சந்திரனுக்கு 5 குற்றங்களுக்கு மரண தண்டனை, 4 குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை, கூடுதலாக 22 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வழங்க நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: