வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தீவிரம்

 

வேதாரண்யம்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி ஜரூராக நடந்து வருகிறது. இந்தாண்டு 6 லட்சம் டன் இலக்கை அடைய தொழிலாளர்கள் மும்முரமாக வேலை பார்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகளவில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. இங்கிருந்து தினம்தோறும் லாரிகள் மூலம் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. வேதாரண்யத்தில் ஒவ்ெவாரு ஆண்டும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறும்.
ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி முதற்கட்ட பணிகள் துவங்கும்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு உப்பு உற்பத்தி துவங்கிய ஜனவரியில் அவ்வப்போது மழை பெய்ததால் 2 முறை உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த பிப்வரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் உப்பு உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியில் உப்பள தொழிலாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் சிப்ட் முறையில் உப்பு உற்பத்தி பணி நடந்து வருகிறது. தினம்தோறும் வெளி மாவட்டங்களுக்கு உப்பு அனுப்பி வைக்கும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது.இந்தாண்டு உப்பு உற்பத்தி 6 லட்சம் டன் என்ற இலக்கை எட்டும் என்று தொழிலாளர்கள் கூறினர்.

 

Related Stories: