மாநிலத்திலேயே அதிகபட்சமாக சேலம் வீரபாண்டி தொகுதியில் 93.40 சதவீதம் வாக்குப்பதிவு

 

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியாக நடந்தது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு தேர்தலை காட்டிலும் இந்த முறை 7.94 சதவீதம் வாக்குகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம் வடக்கு ெதாகுதியில் 20.75 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 13,82,049, பெண் வாக்காளர்கள் 19,97,983 , இதரர் 324 பேர் என மொத்தம் 27,80,356 வாக்காளர்கள் உள்ளனர். இதில் மொத்தம் பதிவான வாக்குகள் 25,23,363 ஆகும். மாவட்டம் முழுவதும் 90.74 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக அதிக வாக்குகள் பதிவானது சேலம் வீரபாண்டியில் தான். இங்கு 93.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது மொத்த வாக்காளர்கள் 28,95,447 பேர் இருந்தனர். இதில் 23,96,895 பேர் வாக்களித்திருந்தனர். ஒட்டு மொத்த வாக்குப்பதிவு 82.8 சதவீதமாகும். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலை காட்டிலும் இந்த முறை கூடுதலாக 7.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கரூர் கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 8,51,690 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 92.65 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் கரூரில் 93.39 சதவீதம், குளித்தலையில் 92.85 சதவீதம், கிருஷ்ணராயபுரத்தில் 92.49 சதவீதம், அரவக்குறிச்சியில் 91.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கரூரில் தான் அதிகளவில் 92.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் என 7 தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தை பொறுத்தவரை சராசரியாக 88.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆத்தூர் தொகுதியில் 88.29%, திண்டுக்கல் தொகுதியில் 85.51%, நத்தம் தொகுதியில் 89.73%, நிலக்கோட்டை தொகுதியில் 87.59%, ஒட்டன்சத்திரம் தொகுதியில் 90.04%, பழநி தொகுதியில் 85.27%, வேடசந்தூர் தொகுதியில் 91.25% வாக்குகள் பதிவாகின.

வேலூர் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 11 லட்சத்து 48 ஆயிரத்து 847 வாக்காளர்களில் 10 லட்சத்து 6 ஆயிரத்து 748 பேர் வாக்களித்துள்ளனர். காட்பாடியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 736 வாக்காளர்களில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 605 ேபர் வாக்களித்தனர். இது 88.07 சதவீதமாகும். வேலூர் தொகுதியில் 87.98 சதவீதம், அணைக்கட்டு தொகுதியில் 89.68 சதவீதம், கே.வி.குப்பம் தொகுதியில் 87.25 சதவீதம், குடியாத்தம் தொகுதியில் 90.47 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Related Stories: