கழுவன் திருவிழா

சிங்கம்புணரி பிப். 24: சிங்கம்புணரி அருகே  எஸ்.வி.மங்கலத்தில் உள்ள ஆத்மநாயகி அம்மன் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மாசிமக திருவிழா நடந்து வருகிறது. ஆறாம் நாள் திருவிழாவான சமணர்களை கழுவேற்றும் கழுவன் திருவிழா நடைபெற்றது. இதில் உடல் முழுவதும் கரி பூசி கழுவன் வேடமணிந்த வரை கிராம மக்கள் அழைத்து வந்து கோயில் முன்பு அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து இளைஞர்கள் பொதுமக்கள் கழுவனை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் ரிசப வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.  நாளை மாலை தேரோட்டமும், வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

Related Stories:

>