சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். எந்த காரணத்திற்காக சென்னை வந்து தங்கியுள்ளனர் என்பதை கேட்டறிந்து பதிவேட்டில் குறித்து வைத்தனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
