சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்கும் வகையில் உயர் சிறப்பு கண்காணிப்பு தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 75,000 வாக்குச்சாவடிகளில் 1,50,128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்தும் ஒரே இடத்தில் கண்காணிக்க பிரத்யேக அறை அமைக்கப்பட்டுள்ளது.
