தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது. முதல்முறை வாக்காளர்கள் 14.59 லட்சம் பேர் உள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் ‘தேர்தலுக்காக 1,06,418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழ்நாட்டில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: