வளர்மதி சந்திப்பில் பயன்பாட்டிற்கு வந்த மேல்மட்ட பாலம்

 

திருப்பூர், ஏப்.21: திருப்பூரில் வளர்மதி சந்திப்பில் கட்டப்பட்டு வந்த மேல்மட்டபாலம் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட்டது. திருப்பூர் மாநகரின் மிக முக்கிய போக்குவரத்து சந்திப்பான வளர்மதி பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சுரங்க பால பணிகள் நடைபெற்று வந்தன. யூனியன் மில் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் சுரங்கப்பாதை வழியாக பூங்கா சாலைக்கும், குமரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மேல்மட்ட பாலத்தின் வழியாக வளர்மதி, மாநகராட்சி சந்திப்புக்கும் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்து குமரன் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் சாய்பாபா கோயில் வழியாக ஆனந்தம் சில்க்ஸ் கார்னர் திரும்பி வளர்மதி சென்றடைந்தது.

Related Stories: