பாஜக-வை வீழ்த்தி திரிணாமுல் காங்., தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியமைக்கும் – மம்தா உறுதி

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புர்பா மெதினிபூர் மாவட்டம் ஹல்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசிய மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை.

திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று உறுதிபட தெரிவித்தார். மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசை பதவியிலிருந்து அகற்று எப்போதும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய மம்தா 2026-ஆம் ஆண்டிலேயே டெல்லியிலிருந்தும் பாஜக-வை நாங்கள் வெளியேற்றுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேர்தலை பொறுத்த வரை மக்கள் மனநிலை குறித்த தனது மதிப்பீடு குறித்து பகிர்ந்து கொண்டுள்ள மம்தா, கடந்த ஒரு மாதமாக மேற்கு வங்கத்தில் விரிவாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும்,தான் பார்த்த வரை, “மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்; யாரும் பாஜகவை விரும்பவில்லை என்பது தெளிவாகிறது,” என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறி உள்ளார். நிதி முறைகேடுகள் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்த மம்தா, ஹால்தியா கப்பல்துறை வளாகம் மற்றும் அதை ஒட்டிய தொழில்துறைப் பகுதியில் “கட்-மணி (கமிஷன்) வாங்கியதற்காக” காவி கட்சிக்கு எதிராக தானும் ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய போவதாக கூறினார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள 294 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர் தாமே என்று, அண்மையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்ததை கடுமையாக விமர்சித்த மம்தா, அது சாத்தியமாக வேண்டுமென்றால், அவர் முதலில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

 

Related Stories: