திருத்தணி: முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில் நாளை காலை 11 நாட்கள் நடைபெறும் சித்திரை மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, இன்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. இந்த சித்திரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, மூலவர் முருகப்பெருமானக்கு நாள்தோறும் பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெறும்.
காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி மாட வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த சித்திரை பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 27ம் தேதி தேர் பவனி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 29ம் தேதி அதிகாலை வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.
