பீகார் புதிய முதல்வர் சாம்ராட் சவுத்ரி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: சட்டப்பேரவையில் வரும் 24ம் தேதி நடக்கிறது

பாட்னா: பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுக்கும் மேல் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் கடந்த 10ம் தேதி மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ள ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் 15ம் தேதி பாஜவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி(57) பீகாரின் புதிய முதல்வராக பதவியேற்றார். இந்த மாநிலத்தில் முதல் முறையாக பாஜ தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் வரும் 24 ம் தேதி பீகார் சட்டப்பேரவை கூட்டம் நடக்கும். அன்றைய தினம் சாம்ராட் சவுத்ரி அரசு பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும். வரும் ஜூலை மாத மழைக்கால கூட்ட தொடருக்கு முன்னதாக இந்த ஒரு நாள் பேரவை கூட்டம் நடைபெறும் என்று மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: