நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதாவை ஆதரித்து கீழ்வேளூரில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: அன்புமணி பா.ஜ.க.வு டன் கூட்டணி சேர, அவர் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது நடந்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வழக்குகள் தான் காரணம். சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும் இந்த வழக்கிலிருந்து தப்பிக்கவும், சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கவுமே அவர் பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளார்.
விஜய் மக்களை தரைமட்டத்தில் சந்திக்காமல், ஆடம்பரமான பயணங்களையே மேற்கொள்கிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவது வெற்றி பெறுவதற்காக அல்ல. மற்றவர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே. அவர் போட்டியிடும் தொகுதிகளிலேயே அவரால் வெற்றி பெற முடியாது. “எல்லாரும் நல்லா இருப்போம்” போன்ற சினிமா வசனங்கள் நிஜ வாழ்க்கையில் தீர்வாகாது. திமுகவை எதிர்ப்பதை தவிர அவரிடம் தெளிவான கொள்கைகள் ஏதும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி 150 நாட்கள் வேலை தருவேன் எனச் சொல்வது சுத்தப் பொய். மத்திய அரசு நிதி ஒதுக் காத நிலையில் அவரால் இதை எப்படிச் செய்ய முடியும்?
மாநில உரிமைகளை பாதுகாப்பதிலும், மக்களின் நலனுக்காக சமரசமின்றி உழைப்பதிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த தலைவராகத் திகழ்கிறார். 23 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையை ஏற்று, ஜனவரி 1 முதல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது. 2021ஐ விட அதிக இடங்களில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்பார். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் விஜயே வெற்றி பெற முடியாது தமிழகத்தில் திமுக ஆதரவு அலை: பெ.சண்முகம் திட்டவட்டம்
- விஜய்
- திமுக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பி.சண்முகம்
- நாகை
- லதா
- கீழ்வேளூர்
- நாகை மாவட்டம்
- மாநில செயலாளர்
- அன்புமணி
- பாஜக
- மத்திய சுகாதார அமைச்சர்
