திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: விவசாய சங்கங்கள், தொழில், வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு

சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சந்தித்து, சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த போது திருப்பூர் மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில் மற்றும் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சந்தித்து, திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காகவும், கழகத்தின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் நன்றி தெரிவித்து, கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தங்கள் ஆதரவினை தெரிவித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

குறிப்பாக, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளி மேலாளர், ஏவிபி பள்ளி மற்றும் கல்லூரி உரிமையாளர், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம், திருப்பூர் மாவட்ட நாடார் சங்கம், சௌண்டம்மன் கோயில் கமிட்டி, பாஸ்டர்கள், அனைத்து இஸ்லாமிக் கூட்டமைப்பு, மஜ்ஜிதே மகமுத் இஸ்லாமிய சுன்னத் ஜமாத், மணி மெட்டல் பட்டறை மற்றும் எவர்சில்வர் பாத்திர சங்கம், பித்தளை பாத்திர சங்கம், கொங்கு வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஈஸா தொண்டு நிறுவனம், திருப்பூர் பெரிய பள்ளிவாசல், கிறிஸ்தவ முன்னணி, மஜித் சேவை குழு, காமாட்சியம்மன் கோயில் டிரஸ்ட், அனைத்து இஸ்லாமிய ஜமாத், வெற்றி அறக்கட்டளை, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம், ஓய்வு பெற்ற வேர் ஹவுஸ் குடோன், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கம், விவசாயிகள், தொழிலதிபர்கள், தமிழ்நாடு நிலவணிகர் நல சங்கம், பொன்னு தனியார் மெட்ர்குலேஷன் பள்ளி, சிஎஸ்ஐ தேவாலயம், தாராபுரம் ஆர்.சி. தேவாலயம், கொழிஞ்சிவாடி மஸ்ஜிதுல் அஷா பள்ளிவாசல், ஓம் சக்தி வழிபாட்டு குழு மன்றம், தமிழ்நாடு நாடார் பேரவை, தமிழ்நாடு செங்குந்தர் மகாஜன சங்கம், தமிழ்நாடு இந்து மருத்துவ முன்னேற்றக் கழகம், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம், தாராபுரம் பெரியவாசல், தாராபுரம் ஆதிதிராவிடர் நல சங்கம், சென்னிமலை, ஈரோடு, கீழ்பவானி பாசன சங்க ஒருங்கிணைப்பாளர், பரஞ்சேர்வழி கரிகாளியம்மன் கோயில் அறங்காவலர் குழு , ஆர் கேஜி நெய் நிறுவன பங்குதாரர், ஜன்னத்துல் பகி பெரிய பள்ளிவாசல், சுன்னத் ஜமாத் பள்ளிவாசல், மூலனூர் – சுன்னத் ஜமாத் பள்ளிவாசல், சிஎஸ்ஐ தேவாலயம், டி.எம்.எஃப் பெந்தகோஸ்த் திருசபை, புனித செபஸ்டியர் ஆலயம், தேவாங்கு செட்டியார் நல சங்கம், செங்குந்தர் மகாஜன சங்கம், செங்குந்தர் மகாஜன சங்கம், தொட்டிய நாயக்கர் நலச்சங்கம் , கொங்கு போயர்கள் ஒருங்கிணைப்பு குழு, பிராமணர்கள் சங்கம், சவரத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக கழக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களில் 926 எண்ணிக்கையிலான திருப்பணிகள் ரூ.142.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் 13 துணை மின்நிலையங்கள் ரூ.2,198.38 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 1,410 கி.மீட்டர் நீளத்தில் சாலைப் பணிகள் ரூ.805.46 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது, ஊரக பகுதிகளில் 994 கி.மீட்டர் நீளத்தில் சாலைப் பணிகள் ரூ.805.46 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது, நீர்வளத் துறையின் சார்பில் 7 தடுப்பணைகள் ரூ.59.58 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது, 74,381 நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, நெடுஞ்சாலைத்துறை சார்பில் 92 பாலங்கள் ரூ.136.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது, திருப்பூர் மாநகராட்சி சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.965.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது, திருப்பூர் மாநகராட்சியில் ரூ.34.80 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம், அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1,978.69 கோடிமதிப்பீட்டில் புதிய குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ரூ.890.00 கோடியில் காங்கேயம், வெள்ளகோவில், தாராபுரம், குண்டடம், பொங்கலூர், பல்லடம், மூலனூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சாரந்த 1252 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவது, திருப்பூர் மாநகராட்சியில் ரூ.12.87 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம், காவிரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டமுத்தூர்- காங்கேயம் 3 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள்மற்றும் 86 ஊராட்சிகளை உள்ளடக்கிய 1790 குடியிருப்புகளுக்கு ரூ.59.33 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மறுசீரமைப்புத் திட்டம், திருப்பூரில் ரூ.39.44 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா போன்ற பல்வேறு நலத்திட்டங்களை, குறிப்பாக விவசாயப் பெருமக்கள், தொழில்துறை மற்றும் வணிகர்கள், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய பெருமக்களின் நல்வாழ்விற்காக சிறப்பான பல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தியதற்காக அவ்வமைப்புகளின் நிர்வாகிகள் கழக தலைவர் முதலமைச்சர் சந்தித்து, நன்றியினை தெரிவித்துக் கொண்டு, சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழக கூட்டணிக்கு தங்கள் ஆதரவினையும் தெரிவித்தனர்.

Related Stories: