ஐந்தாண்டு கால சாதனைகளை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்: அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள்

மதுரை, ஏப். 18: ஐந்தாண்டு கால சாதனைகளை திமுகவினர் வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கிழக்கு வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பொய்கைக்கரைபட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளரும், வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சருமான பி.மூர்த்தி தலைமை வகித்து பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தல் என்பது தமிழ்நாட்டின் உரிமை பாதுகாத்திட நடைபெறும் தேர்தல், இந்த தேர்தலில் திமுகவின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி ஆக இருக்கும்.

எனவே திமுகவினர் ஒவ்வொருவரும் வீடு வீடாக சென்று ஐந்தாண்டு கால திமுக அரசின் சாதனைகளை ஒரு வாக்காளர் கூட தவறவிடாமல் சந்தித்து எடுத்துரைக்க வேண்டும். மேலும் கிழக்கு தொகுதியில் ஐந்தாண்டு காலத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் நூறு சதவீதம் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது.

இதை வாக்காளர்களிடையே எடுத்துரைக்க வேண்டும்’’ என்றார். இந்த கூட்டத்தில் மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நேருபாண்டியன், ஒன்றிய செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர் சசிக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் வீரராகவன், நிர்வாகிகள் முருகேசன், அன்பு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்

 

Related Stories: