திருச்சி, ஜூன் 26: சென்னை எழும்பூர்-வேளாங்கண்ணி தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16175/16176) மீண்டும் தனது பழைய முனையமான சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ரயில் எண் 16176 வேளாங்கண்ணி-சென்னை எழும்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில், வரும் ஜூன் 30 முதல் சென்னை எழும்பூர் நிலையம் வரை இயக்கப்பட்டு அங்கு நிறுத்தப்படும். அதே போன்று, ரயில் எண் 16175 சென்னை எழும்பூர்-வேளாங்கண்ணி தினசரி விரைவு ரயில், ஜூலை 1 முதல் சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கும். மீண்டும் இணைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடப் பகுதிக்கான வருகை மற்றும் புறப்பாட்டு நேரங்கள் தனியாக வெளியிடப்பட்டுள்ளன என்று தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
