பெருந்துறை தொகுதியில் தேர்தல் விழிப்புணர்வு

பெருந்துறை, ஏப்.17: பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஈரோடு கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார். வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பளியம்பட்டி, கணபதி நகரில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.‌

இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஈரோடு கலெக்டருமான கந்தசாமி கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி செயலர் தனம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறையின் செயற்பொறியாளர் மீனாகுமாரி, உதவி செயற்பொறியாளர் கற்பகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Related Stories: