தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
ஒருத்தன் வந்து தாலிக்கு தங்கம் தர்றான்னு கை தட்டுறீயே. ஏன்டா உன் பொண்டாட்டி கழுத்துல, நீ காசு கொடுத்து சம்பாதிச்சு தாலி கட்ட முடியலைன்னா, ஒரு பிள்ளை கழுத்துல அரை பவுன் தாலி கட்ட முடியாத உனக்கு எதுக்குடா பொண்டாட்டி பிள்ளை. எதுக்குடா இந்த மானங்கெட்ட வாழ்வு? ஏன்டா ஒரு கால் பவுன் தாலி வாங்கி கட்ட முடியாத நீ, என் பிள்ளைய வச்சு கட்சி வளர்க்கப் போறீயா? என்னடா மானங்கெட்ட பொழப்பு? உனக்கு பொண்டாட்டி கட்ட இன்னொருத்தன் தங்கம் தர்றானேடா!
டேய், தன்மானத்தோடு பொழைக்கப் பாருடா. நான் அண்ணன் சீமான் தான். சம்பாதிச்சு ஒரு பவுன் இல்ல, ஒன்பது பவுன்ல தாலிய கட்டுடான்னா கட்டுறான். தன்மானத்தோடு தமிழன் தலைநிமிர்ந்து தற்சார்பு வாழ்க்கை வாழணும். எவன் காலையும் சாராம. நீ பெத்த பிள்ளைக்கு நீதான்டா மோதிரம் போடணும். ஊரான் கொடுத்ததை போடாதே. நீ பிள்ளைய கூட்டிட்டு வா, கர்ப்பமான பிள்ளைய சொல்லு, நானே கூட்டிட்டு வந்து மருத்துவம் பார்ப்பேன். பிரசவம் பார்ப்பேன். ஒரு ரூபாய் செலவு இல்லை. தனியார் கிட்ட போனீன்னா மூணு லட்சம் ரூபாய் பறிச்சிருப்பான். அந்த மூணு லட்சம் ரூபாய் உனக்கு மிச்சம். அந்த மூணு லட்சம் ரூபாய வச்சு நீ மூணு பவுன்ல கூட மோதிரம் போடு உன் பிள்ளைக்கு. ஏன்டா இப்படி?… இவ்வாறு அவர் பேசினார்.
